தேசிய கீதத்தில் மாற்றம்?

jangana
தேசிய கீதத்தை திருத்த வேண்டும் என நாடாளுமன்ற மேல்-சபையில் காங்.எம்.பி. தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற மேல்-சபையில் காங்கிரஸ் எம்.பி.யும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான ரிபுன் போரா, நேற்று ஒரு தனிநபர் தீர்மானம் தாக்கல் செய்தார்.

அதில், தேசிய கீதத்தில் இடம் பெற்று உள்ள சிந்து என்ற வார்த்தைக்கு பதிலாக வடகிழக்கு என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்:-

“தேசிய கீதத்தில் வடகிழக்கு (மாநிலங்கள்) பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் சிந்து என்ற வார்த்தை இடம் பெற்று உள்ளன. சிந்து, தற்போது பாகிஸ்தானில் அங்கம் வகிக்கிறது. எதிரி நாட்டின் ஒரு இடத்தை நாம் ஏன் புகழ வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “1950-ம் வருடம் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், தேவைப்பட்டால் தேசிய கீதம் எதிர்காலத்தில் திருத்தப்படலாம் என்று கூறி உள்ளார்” என்றார்.

இவரது தீர்மானம், நாடாளுமன்ற மேல்-சபையில் அடுத்த வாரம் எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது கோரிக்கை ஏற்கப்பட்டால் தேசிய கீதத்தில் மாற்றம் வரலாம்.

Leave a Response