கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் சூர்யா…!

dfg

 

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா,  சாய்பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

 

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா செல்வராகவன் படத்தையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் கே.வி.ஆனந்த் சூர்யா கூட்டணி உறுதியானது.

 

தேசிய விருது ஒளிப்பதிவாளராக இருந்து ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் இரண்டாவது படமாக சூர்யாவை வைத்து ‘அயன்’ எடுத்தார். படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமில்லாமல் சூர்யாவின் திரையுலக வாழ்வில் மைல் கல் படமாக அமைந்தது. அதேசமயம் இதே கூட்டணி மீண்டும் இணைந்த ‘மாற்றான்’ படம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது

Leave a Response