தேசத்தை அதிர வைத்த “மகாராஷ்டிரா” விவசாயிகள்… அதிகாலை 4 மணிக்கு உணவோடு காத்திருந்த “இஸ்லாமியர்கள்”…

5a016bd7-df47-4f12-8b65-3b33a50a2c37

5a016bd7-df47-4f12-8b65-3b33a50a2c37

மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் காத்திருந்த சகோதரத்துவம் நெகிழ வைத்தது. விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கிலிருந்து தொடங்கிய பேரணி நேற்று மும்பையை வந்தடைந்தது.

இடதுசாரிகளின் விவசாய அமைப்பான, அகில இந்திய கிஷான் சபா’ இந்த போராட்டத்தை முன்னெடுத்தது வழி நெடுகிலும் விவசாயப் பேரணிக்கு ஆதரவு அதிகரித்தபடியே இருந்தது.

கடந்த 6-ஆம் தேதி நாசிக்கில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி 5 நாட்களில் சுமார் 180 கி.மீ தூரத்தை கடந்து தானே-மும்பை எல்லைக்கு நேற்று வந்தடைந்துள்ளது. சகோதரத்துவத்தின் உச்சகட்டம் இவர்களின் பைகுல்லா சந்திப்பை அடைந்த போது அங்கு ஏராளமான முஸ்லிம் சகோதரர்கள் காலை 4 மணி முதல் உணவு, தண்ணீர், பேரிச்சம் பழம், பிஸ்கெட்டு ஆகியவற்றுடன் காத்திருந்தனர்.

இதை பார்க்கும் போது சகோதரத்துவத்தின் உச்சகட்டமான செயலாகவே கருதப்படுகிறது.

820b3f81-4b8c-4561-98d1-a1d5dbda3221

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *