மீண்டும் சுந்தரபாண்டியனாக களமிறங்கும் சசிகுமார் !

sundara

sundara
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் தான் “சுந்தரபாண்டியன்”. இப்படத்தில் தன்னிடம் “சுப்ரமணியபுரம்”, “ஈசன்” ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை, இந்தப் இயக்குனராக அறிமுகப்படுத்தி நடித்திருந்தார் சசிகுமார்.

இதையடுத்து “இது கதிர்வேலன் காதல்”, “சத்ரியன்” ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன், தற்போது “சுந்தரபாண்டியன் 2” படத்தை இயக்க உள்ளார். இதில் மீண்டும் சசிகுமார் நடிக்கிறார்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில்:- ‘சமூக வலைத்தளங்களில், சுந்தரபாண்டியன் கூட்டணி மீண்டும் எப்போது இணைகிறது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும்’ என்றார். தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் “நாடோடிகள் 2” படத்தில் நடித்து வரும் சசிகுமார், “அசுரவதம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து “சுந்தரபாண்டியன் 2” தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் எஸ் ஆர்.பிரபாகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *