திருவனந்தபுரத்தில் காளி கோவிலில் ரத்த அபிஷேகம் செய்யும் வினோத வழிபாடு!

kali
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா என்ற பகுதியில் தேவியோடு ஸ்ரீவிதாவுரி வைத்யனாதா கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள காளி சிலைக்கு மனித இரத்தத்தால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதனால், மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் எனக் கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவாக பத்ரகாளி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் நடத்தப்படுவது இக்கோவிலின் வழக்கமாக உள்ளது. ரத்த அபிஷேகம் செய்வதால் காளியின் மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக நம்புகின்றனர்.

மருத்துவத்துறையின் மேற்பார்வையில் பக்தர்களிடமிருந்து ரத்தம் பெறப்படுவதாக அந்த கோவிலுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலயில் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களிடம் ரத்தம் பெறுவதைத் தடுத்து நிறுத்தும்படி கேரள அரசு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Response