விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி: அதிர்ச்சியில் மகாராஷ்டிரா !

maka
மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட பேரணியை மேற்கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் நளிவடைந்தது. இதனால் ஏற்பட்ட கடன்சுமை காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், வன உரிமை சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணியை மேற்கொண்டனர்.

கடந்த 5-ம் தேதி நாசிக்கில் தொடங்கிய இந்த பேரணி, 180 கிலோமீட்டரை கடந்து நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்தது. இந்தப் பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இவர்களின் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் நூறு பேரில் துவங்கிய பேரணி தற்போது 40ஆயிரம் பேரை கடந்துந்துள்ளது. சற்றும் எதிர்பார்காத இந்த விவசாயிகளின் பேரணியால் மகாராஷ்டிரா மாநிலமும் அந்த அரசாங்கமும் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.

தற்போது மும்பை தானே நெடுஞ்சாலையில் விவசாயிகள் பேரணி சென்று கொண்டிருக்கிறது. பேரணியில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று சட்டசபையை முற்றுகையிட உள்ளனர்.

Leave a Response