குரங்கணி காட்டுத் தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்திக்க தேனி செல்லும் முதல்வர் பழனிசாமி !

edappadi-palanisamy
குரங்கணி காட்டுத் தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்திக்கவும் மீட்புப் பணிகளை பார்வையிடவும், இன்று மாலை முதல்வர் தேனி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

காட்டுத் தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த 6 பேரும், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதி காட்டுத் தீயில் 37 பேர் சிக்கினர். இதில் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். நல்ல நிலையில் மீட்கப்பட்டவர்களில் 10 பேர் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்திக்கவும் மீட்புப் பணிகளை பார்வையிடவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தேனி செல்கிறார்.

Leave a Response