சினிமா விளம்பர பெண் ஏஜென்ட் மீது மோசடி வழக்கு பதிவு…

Sky Cinemas Alamelu News Still
அதர்வா மற்றும் அமலா பால் இணைந்து நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “முப்பொழுதும் உன் கற்பனைகள்”. இப்படத்தை எல்ரேட் குமார் இயக்கி அவரே தன்னுடைய ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் என்ற நிறுவனம் மூலம் தயாரித்தார்.

திரைப்படங்கள் என்னதான் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும், மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் என்பது மிக அவசியமாகிறது. அன்று தினசரிகள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வது கட்டாயமாக தேவைப்பட்டது. இதன் காரணமாக ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிர்வாகம், ‘ஸ்கை கமெர்ஷியல்’ என்ற விளம்பர நிறுவனத்தினை தொடர்புகொண்டு அங்கு திருமதி.அலமேலு என்பவரை சந்தித்து “முப்பொழுதும் உன் கற்பனைகள்” திரைப்படத்தின் விளம்பரத்தின் ஏஜெண்டாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரம் சம்மந்தமாக ‘ஸ்கை கமெர்ஷியல்’ நிர்வாகம் மற்றும் அலமேலு சுமார் ரூ.28,77,596 மதிப்பிலான போலியான ரசிதுகளை ‘ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட்’ நிர்வாகத்திற்கு கொடுத்து, அவர்கள் நிறுவனத்தை ஏமாற்றியுள்ளதாக பிப்ரவரி 2, 2018 அன்று சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ‘ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட்’ மேலாளர் மகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை விசாரித்த காவல்துறையினர் அலமேலு மற்றும் ‘ஸ்கை கமர்ஷியல்’ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டு செக்சன் 409 & 420 ஆகிய மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இது சம்மந்தமாக அலமேலு அவர்களை தொலைபேசி மூலமாக விசாரிக்கையில், மகேஷ் என்பவர் தான் ‘ஸ்கை கமெர்ஷியல்’ நிர்வாகத்தை சுமார் ரூ.40 லட்சம் வரை ஏமாற்றியுள்ளதாகவும் இதைப்பற்றி தான் சென்னை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் இது பற்றி அவர் சென்னை காவல்துறை ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாத்தை தான் சந்தித்ததாகவும், அதற்க்கு ஆணையாளர் அவர்கள் இது சிவில் கேஸ், எனக்வே கோர்டில் பார்த்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியதாகவும் அலமேலு குறிப்பிட்டார். ஒரு மோசடி வழக்கை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் இவ்வாறு சொல்லமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. செய்தி வெளிவராமல் இருப்பதற்கு இப்படி ஒரு பொய்யை அலமேலு சொன்னாரா என்று ஒரு சந்தேகம் வருகிறது.

அலமேலு அவர்கள் சென்னை சைபர் க்ரைமில் கொடுத்துள்ள புகாரை கொடுக்கும்படி கேட்டதற்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னவர் இதுவரை அனுப்பி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அலமேலு புகார்தாரர் மீது சைபர் க்ரைமில் புகார் கொடுத்தாரா அல்லது பத்திரிகையாளர்களை திசை திருப்ப இப்படிப்பட்ட ஒரு பொய் தகவலை பரப்புகிறாரா என்று சந்தேகம் தான் எழுகிறது. அதுமட்டுமின்றி, இந்த செய்தியை போடவேண்டாம் என்று மறைமுக அதிகாரத்தோடு கேட்டுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலமேலு அவர்களை பற்றி வேறு சில சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிர்வாகத்தில் பணிபுரிபவர்களிடம் விசாரித்தோம். நாம் அவர்களிடம் விசாரிக்கையில் இவரையும், இவருடைய நிறுவனத்தை பற்றியும் குறைதான் சொன்னார்களே தவிர அவர்களை யாரும் புகழவில்லை. ஒரு கொசுறு செய்தி, இதே அலமேலு என்பவர் 1990 காலகட்டத்தில், அப்போது பிரபலமாக இருந்த ஒரு மருத்துவ என்னை விளம்பரத்திற்கு அந்த நிர்வாகத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு ஊடக நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆகினாராம் இந்த அலமேலு என்றும் சொல்கின்றனர்.

சிரமத்தில் இருக்கும் சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் இத்தகைய நபர்களை ஏஜெண்டுகளை நம்பி விளம்பரத்திற்க்கென்று ஏன் கோடிகளில் பணம் கொடுத்து ஏமாற வேண்டும்! அதற்க்கு தயாரிப்பு நிர்வாகமே அந்த அந்த ஊடகத்திற்கு அவர்களாகவே விளம்பரத்தை கொடுக்கலாமே!! இனியாவது தயாரிப்பாளர்கள் உஷார் ஆகிறார்களா என பார்போம்!!!

New Doc 2018-02-15
New Doc 2018-02-15

New Doc 2018-02-15
New Doc 2018-02-15

New Doc 2018-02-15
New Doc 2018-02-15

Leave a Response