பிரபல நடிகரை ஏமாற்றிய தனுஷின் தயாரிப்பாளர்…

1518694984890_wm
2003ம் ஆண்டில் தனுஷ் மற்றும் சாயா சிங் இணைந்து நடித்து வெளிவந்து வெற்றிநடை போட்ட திரைப்படம் ‘திருடா திருடி’. இத்திரைப்படத்தை சுப்பிரமனிசிவா இயக்கி, இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்ஸ் சார்பாக எஸ்.கே.கிருஷ்ணகாந் தயாரித்தார்.

இப்படத்தின் அபார வெற்றியை கண்டு, இப்படத்தின் ஹிந்தி மொழிமாற்று(டப்பிங்) உரிமையை நடிகர் யூகி சேது அப்போதே வாங்கிவிட்டார். ஏதோ காரணத்தினால் இதுநாள் வரை இப்படத்தை இதுவரை யூகி சேது ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடாமலே இருந்து வருகுறார்.

தற்போது வந்துள்ள அதுர்ச்சி செய்தி என்னவென்றால், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை 2016ம் ஆண்டில் மும்பையை சேர்ந்த :கோல்ட் மையின்’ என்னும் நிறுவனத்திற்கு மீண்டும் இரண்டாவது முறையாக யூகி சேதுவை ஏமாற்றும் விதமாக விற்பனை செய்துள்ளாராம்.

இப்படத்தை இரண்டாவது நபராக ஹிந்தி உரிமையை வாங்கியுள்ள ‘கோல்ட் மையின்’ நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு டப்பிங் பனியை முடித்துவிட்டு தணிக்கை சான்றிதழையும் பெற்றுள்ளதாம்.
Thiruda_Thirudi_DVD_Cover
இந்த விவரமறிந்து டெண்ஷனாகிய யூகி சேது, படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்தை தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் கிருஷ்ணகாந்தை தொலைபேசி மூலமாகவும் சரி, அவருடைய பழைய விலாசங்களிலும் சரி அவரை தொடர்புகொள்ள இயளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த செய்தி சம்பந்தமாக ‘ஒற்றன் செய்தி’ நிருபர், நடிகர் யூகி சேதுவை தொடர்புகொண்டு விசாரித்தபோது செய்தி உண்மைதான் என உறுதி செய்தார்.
ஒரு படத்தின் உரிமையை இருமுறை விற்பது சட்டப்படி குற்றம் என்பதை அறிந்த யூகி சேது சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு இப்படத்தின் வெளியீட்டை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response