மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களம் இறங்குகிறது “கலகலப்பு 2”

kalakalappu 2

2012-ம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டாது. இதன் இரண்டாம் பாகம் ‘கலகலப்பு 2’-வில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், 2 மேக்கிங் வீடியோ மற்றும்
“ஒரு குச்சி ஒரு குல்ஃபி” என்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார், UK.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்க வருகிற பிப்ரவரி 9-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Response