முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தஞ்சம் புகும் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்.

WhatsApp Image 2018-01-29 at 6.54.38 PM

தஞ்சையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ நெடுமாறன் அவர்களை சந்தித்து ONGC பேரழிவு திட்டம் எதிர்ப்பு போராட்டங்களை காவல் துறையை பயன்படுத்தி ஒடுக்குவதையும், போராட்டக்காரர்களின் நெறிக்கும் மத்திய, மாநில அரசுகளின் நயவஞ்சக நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆலோசனை நடத்தினார்.

பிப்ரவரி 6ல் கருகும் பயிரை காப்பாற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி பிரதமரை வலியுறுத்தி காவிரி நீரை பெற்றுத் தர கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தஞ்சம் புகும் போராட்டம் பி.ஆர்.பாண்டியன். திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனதலைவர் சிவ.வடிவேலுடையார் 100வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது. காவிரி டெல்டாவில் கருகும் பார்த்து மனமுடைந்து விவசாயிகளின் அதிர்ச்சி மரணங்கள் துவங்கியுள்ளது எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைத்து தலைவர்களோடு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தி கர்நாடக விடம் காவிரி நீரை பெற்று வழங்க வலியுறுத்தி பிப்ரவரி 6ந் தேதி முதலமைச்சரின் வீட்டில் தஞ்சம் மடைவோம். தேனி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தால் தேனி குமுளி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

உடன் தஞ்சை மண்டல தலைவர் டி பி கே.இராஜேந்திரன், ஜி.வரதராஜன், நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப் பையன், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகஸ்ட்டின், குடவாசல் ஒன்றிய தலைவர் சரவணன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்குகொண்டனர்.

Leave a Response