பேருந்து கட்டணத்தை குறைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது: ஸ்டாலின்

WhatsApp Image 2018-01-29 at 11.10.33 PM

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் மறியல் போராட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்றது. மேலும் இந்த மறியல் போராட்டத்தில் திமுகவுடன், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன இதனையடுத்து திருச்சியில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மறியல் போராட்டத்தில் அனைத்துக்கட்சியினருடன், மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றிப் போராட்டமாக மாற்றிய கழக தோழர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் நண்பர்களுக்கும், பெரும் ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். பேருந்து கட்டணத்தை குறைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response