பல்வேறு நிபந்தனைகளுடன் தம்பதியருக்கு விவாகரத்து: உச்சநீதிமன்றம்

SUPREME_COURT_OF_INDIAaa 2

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பொறியியல் மற்றும் மேலாண்மை பட்டதாரியான இவருக்கும் அவரது மனைவிக்கும் ஒத்து போகவில்லை. ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். ஒருவர் மீது மற்றொருவர் புகார் செய்வது, வழக்கு தாக்கல் செய்வது என பிரச்சினைகள் தொடர்ந்தன.
தம்பதியரில் மனைவியின் சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் பராசர் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின்போது, “பெண்ணுக்கு கணிசமான நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, அந்த தம்பதியருக்கு விவாக ரத்து வழங்கி உத்தரவிட்டது.

இருவரது விவாகரத்து மனுக்களும் முடிவுக்கு வந்து விட்டதால், இனி எதிர்காலத்தில் கணவன், மனைவியிடமோ, மனைவி, கணவனிடமோ எந்த கோரிக்கையையும் வைக்கக்கூடாது.இந்த வழக்கில் கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகள், ஆவணங்களில் இருந்து நீக்கப்படும். அதாவது, இதில் அவர்கள் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற முடியாது. விவாகரத்து வழங்கப்படுகிற கணவன், மனைவியுடைய படத்தையும், மனைவி, கணவனுடைய படத்தையும் எந்த தருணத்திலும், எங்கும் வெளியிடக்கூடாது. சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் கூட வெளியிடக்கூடாது. தங்களது திருமண வாழ்வின் சர்ச்சைகளை தம்பதியர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும். அதே நேரத்தில் அவர்களது திருமணம் இனி செல்லாது என்று அறிவித்த சுப்ரீம் கோர்ட்டு, மனைவிக்கு கணவர் ரூ.37 லட்சத்தை நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Leave a Response