“நிமிர்” படம் எப்படி இருக்கு.. திரை விமர்சனம்…

201801221058333300_1_Nimir-Preview1._L_styvpf

மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் மகேஷண்டே பிரதிகாரம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் நிமிர், ஊரில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து வாழ்பவர் உதயநிதி.
தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வருபவர், எந்த ஒரு பிரச்சனைகளிலும் தலையை கொடுக்காமல் இருப்பவர், சம்மந்தமே இல்லாமல் ஒரு சண்டையில் தலையிடுகிறார். அப்போது சமுத்திரக்கனி அவரை அடித்து அசிங்கப்படுத்த, இனி காலில் செருப்பே போடமாட்டேன், சமுத்திரகனியை அடித்த பிறகு தான் செருப்பு அணிவேன் என்று உதயநிதி சபதம் எடுக்கின்றார்.
இதை தொடர்ந்து இவர் சமுத்திரகனியை அடித்தாரா, காலில் செருப்பு அணிந்தாரா என்பதே மீதிக்கதை.

கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குனர் மகேந்திரன் நடிப்பு பாராட்டும் வகையில், பாத்திரத்திற்கு ரொம்பவுமே பொருந்துகிறார். நாயகிககளான பார்வதி நாயர், நமீதா பிரமோத், குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ். பாஸ்கர், சண்முகராஜா என எல்லோருமே பாத்திரங்களோடு பொருந்திப்போகிறார்கள். நாயகி நமீதா பிரமோத் அவரது பாத்திரத்தில்,கதை கட்சிதமாக மனதில் பதியும்படி வந்து ரசிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகி பார்வதி நாயர் வழக்கம்போல் அவரது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள், ஒவியப் பதிவாக இருப்பது வசீகரம். அஜனீஷ் லோக்னாத் – தர்புகா சிவா இருவரது இசையில்., “பூவுக்கு தாப்பா எதுக்கு ?”, “எப்போதும் உன்னை பார்க்கணும்”, “நெஞ்சில் மாமழை” , “மின்மினியா வந்தவளே” உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம்.

சண்டைபோடும் போது சட்டை கிழிவதும், செருப்பு அவிழ்வதும் சகஜமான ஒன்று தான் என்ற போதிலும், உதயநிதி செருப்பை வைத்து மட்டும் ஏன் சபதம் எடுக்கிறார், என்பதற்கான காரணத்தை இயக்குநர் அழுத்தமாக சொல்லவில்லை. இத்தனை பலம் இருந்தாலும் மலையாளத்தில் இருந்த யதார்த்தம் இதில் கொஞ்சம் குறைவு தான் என தோன்றுகின்றது. ஏனெனில் அங்கு மேக்கப் என்பதே பலருக்கும் இருக்காது, இதில் ஹீரோயின் எல்லாம் எப்போதும் புல் மேக்கப்பில் தான் உள்ளனர், அதிலும் படத்தின் ஓப்பனிங்கில் வரும் ஒரு பாடல் படு செயற்கை. படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் எல்லாமே ரசிக்கத்தக்க ரகம். குறிப்பாக, அஜானீஷின் இசையில் தாமரையின் வரிகளில் வரும் “நெஞ்சில் மாமழை பாடல்” முதல்முறை கேட்கும்போது மனதைக் கவரும்.

மலையாள ஒரிஜினலைப் பார்த்திருந்தாலும் பார்த்திருக்காவிட்டாலும் ஒரு முறை பார்த்து ரசிக்கதக்க படம்.

Leave a Response