நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்…

polio

நாடு முழுவதும் இன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான முகாம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. போலியோ முகாமை தொடங்கி வைக்கும் விதமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று டெல்லி ராஷ்ட்ரிய பவனில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவும் பங்கேற்றார். 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இதே போன்று பயணிகள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ போடுவது கட்டாயம்.

ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து போட்டிருந்தாலும் நாளைய முகாமில் பங்கேற்று போலியோ மருந்து போட்டுக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து மார்ச் 11ம் தேதி வழங்கப்பட உள்ளது.

Leave a Response