பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக போராட்டம்

kani

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று (27/01/18) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, சேப்பாக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன. மேலும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

அதிமுக அரசு பேருந்துக்கட்டணத்தை மறுபரிசீலனை செய்து பொதுமக்களுக்கு நிறைவளிக்கக் கூடிய முடிவை வெளியிடும் வரை ஜனநாயக முறையில் அமைதியான அறவழிப் போராட்டத்திற்கு திமுக உடன்பிறப்புகள் அனைவரும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என திமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Leave a Response