“வாட்ஸ்அப் பிஸ்னஸ்” இந்தியாவில் அறிமுகம்..

201801191034504366_WhatsApp-Business-is-finally-out_SECVPF

வாட்ஸ்அப் கடந்த வாரம் அறிமுகம் செய்து சில நாடுகளில் மட்டும் வெளியிட்ட வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் புதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்த துவங்கலாம். தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி விரைவில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திற்கும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கவுண்ட் டைப் (Account Type) எனும் அம்சம் இந்த செயலியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களை ஓர் வியாபார நிறுவனமாக வாட்ஸ்அப்பில் வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இதனால் அவர்களை தொடர்பு கொள்வோர் வியாபாரம் சார்ந்த விவரங்களை பார்க்க முடியும். வாட்ஸ்அப் பிஸ்னஸ் மற்றும் வழக்கமான வாட்ஸ்அப் செயலி முற்றிலும் வெவ்வேறு பயன்பாடுகளை கொண்டுள்ளது. இதனால் பழைய வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும். இத்துடன் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்களை கட்டுப்படுத்தும் முழு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வசதி வாடிக்கையாளர்கள் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்கள் பிடிக்காத பட்சத்தில் அவற்றை பிளாக் செய்ய முடியும். மேலும் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை ஸ்பேம் என குறிப்பிட முடியும்.

Leave a Response