விஜயேந்திரர் ஞானநிலையில் அமர்ந்திருந்தராமே..! எச் ராஜா விளக்கம்..!

Tamil_News_large_1892238

பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் தந்தையான மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் – சமஸ்கிருதம் அகராதி நூல் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிடப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த அகராதியை வெளியிட்டார். இந்த விழாவில் காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர் கலந்துகொண்டார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நிற்க, விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு தமிழ் அமைப்புகளும் திராவிட இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் ஞானநிலையில் அமர்ந்திருந்தார் என எச் ராஜா தெரிவித்துள்ளார். விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்ததை குற்றம் என சொல்ல முடியாது என்றும் எச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் அமர்ந்திருந்தது அவமானமான செயல் அல்ல என்றும் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Response