நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் ராமதாஸ் அறிக்கை.

ramadoss_17050_02224
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 10 முதல் 12 லட்சம் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய முடியும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை கொள்முதல் செய்ய இதுவரை 100-க்கும் குறைவான நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதை படிப்படியாக 500 கொள்முதல் நிலையங்கள் என்ற அளவுக்கு திறக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட அவை போதுமானதாக இருக்காது. போதிய அளவில் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்காவிட்டால், விவசாயிகள் நெல்லை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாய சங்க தலைவர்களுடன் பேச்சு நடத்தி குறைந்தபட்சம் 900 முதல் 1,000 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இந்த மாத இறுதிக்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Response