பேமெண்ட் வசதியுடன் விரைவில் வாட்ஸ்அப் செயலி அறிமுகம்..

1510416256561

வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அடுத்த மாத வாக்கில் வழங்கப்படலாம் என்றும், பிப்ரவரி மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் பரிமாற்றம் செய்யும் ஆப்ஷனில் வாட்ஸ்அப் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் UPI சார்ந்த வழிமுறையை செயல்படுத்த வாட்ஸ்அப் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை வாட்ஸ்அப் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வழங்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் பணம் பரிமாற்றம் செய்ய மத்திய அரசின் அனுமதியை வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெற்றது. செயலியில் இந்த அம்சத்தை செயல்படுத்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். எஸ்.எம்.எஸ். போன்று அதிவேகமாக பணம் அனுப்ப பல்வேறு நிலைகளில் என்க்ரிப்ஷன் செய்ய வேண்டும் என மூத்த வங்கி அதிகாரி தெரிவித்தார்.

Leave a Response