ஊதியம் எனக்கு வேண்டாம்… தினகரன் அதிரடி

ttv ad mla

ஒரேடியாக 66 சதவீதம் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கேட்டுக் கொண்டனர். எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதி நிலை நெருக்கடியை காரணம் காட்டி அதிமுக அரசு மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தி உள்ளது. மக்கள் தலையில் சுமையை சுமத்திவிட்டு எம்.எல்.ஏக்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே அப்படிப்பட்ட ஊதிய உயர்வே எனக்கு வேண்டாம் , அதை நான் பெறப்போவதும் இல்லை. உயர்த்திய பேருந்து கட்டணத்தை உடனடியாக அரசு திரும்பபெற வேண்டும்.

உயர்த்திய பேருந்து கட்டணத்தை உடனடியாக அரசு திரும்பபெற வேண்டும். நிதி நெருக்கடியை போக்க மாற்று வழியை கண்டறியாமல் மக்களை அரசு வஞ்சித்துள்ளது என்றார் டிடிவி தினகரன்.

Leave a Response