விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப வைரமுத்து கருத்து சர்ச்சை – பி.ஆர்.பாண்டியன்.

WhatsApp Image 2018-01-19 at 1.24.00 PM

தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சை த புண்ணியமூர்த்தி, எம்.மணி, சென்னை அசோக் லோதா, கோபிநாத் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர் பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது..

தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு நிலுவைத் தொகை ரூ 27.50 கோடியை விவசாயிகளுக்குவழங்க நிர்வாகம் மறுத்ததால் வேறு வழியில்லாமல் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட தலைவர் துரை, பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்று 60 தினங்களுக்குள் வழங்க உத்திர விட்டும் கெடு தேதி முடிவுறும் நிலையில் இதுவரையில் வழங்கவில்லை. எனவே அமைச்சர் அவர்கள் தலையிட்டு உடன் கிடைத்திட ஆவண செய்ய வேண்டுகிறோம். குருங்குளம் சர்க்கரை ஆலை ஆண்டு பராமறிப்பு நிதி மாற்று தேவைகளுக்கு பயன்படுத்துவதால் உரிய பராமறிப்பு பணிகள் நடைபெறாமல் பிழி திறன் குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் முற்றிலும் ஆலை முடங்கும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து உரிய அவசர கால நடவடிக்கை எடுத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து பராமறிப்பு பணிகளை முழுமையாக மேற்கொண்டு ஆலையை பாதுகாத்திட வேண்டும்

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஆலைகளில் பிழிதிறன் குறைவாலும், சில ஆலைகளின் செயல்பாடு நின்றதாலும் அங்கு பணியாற்றிய பணியாளர்களை தேவையின்றி குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு பணி மாறுதல் செய்வதால் நிதி சுமை ஏற்படுகிறது. இதனை உணர்ந்து அந்நடவடிக்கையினை கைவிட்டு ஆலையை நலிவிலிருந்து பாது காத்திட வேண்டும். மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. உடன்பணிகளை விரைவுபடுத்தி முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தினோம்.வரும் 23.01.2018க்குள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிலுவை தொகையை விடுவிக்க அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் உத்திரவாதமளித்துள்ளார்..

மேலும் குமரி மாவட்டத்தில் ஓக்கி புயல் பாதிப்பிலிருந்து மக்கள் மீளவில்லை அரசு அறிவித்த நிவாரணம் வழங்கப்படவில்லை, காவிரி டெல்டாவில் சுமார் 5 லட்சம் ஏக்கர் தண்ணீரின்றி கருகத் தொடங்கி விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கருத்து சர்ச்சைக்குறியதாக கூறி போராட்டம் தீவிரமடைவது ஏற்ப்புடையதல்ல, வைரமுத்துவும், ஹெச் இராஜாவும் ஒரு வருக்கொருவர் வருத்தம் தெரிவித்த பிறகும், போராட்டம் என்கிற பெயரில் ஜாதி, மத, இன மோதல்கள் உருவாகும் நிலை ஏற்பட்டும் வகையில் போராட்டம் நடைபெறுவதை தமிழக அரசு வேடிக்கை பார்பது நல்லதல்ல.

தமிழக விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்பும் உள்நோக்த்தோடு மத்திய, மாநில அரசுகள் மறைமுகமாக துணை போகிறதோ என்கிற சந்தேகம் உள்ளது.எனவே தமிழக அரசு சர்ச்சைக்குறிய கருத்து குறித்து உண்மை நிலையை தெளிவுபடுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் பிரதமர் மோடி பொருப்பேற்றது முதல் 4 ஆண்டுகாலமாக தொடர்ந்து காவிரி டெல்டா வறட்சியால் பாதிக்கப்படுகிறது ஒரு 1 டிஎம்சி கூட காவிரி நீரை பெற்று தரவில்லை,

இதுவரையில் பிரதமராக இருந்தவர்கள் பாதிக்கும் காலத்தில் கர்நாடக அரசோடு பேசி இருக்கும் தண்ணீரில் பங்கிட்டு பெற்றுக் கொடுத்த நிலையை மோடி பின்பற்ற மறுக்கிறார்.
எனவே தமிழக முதல்வர் காவிரி குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நேரில் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றார்.

Leave a Response