இரட்டை பதவி, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பதவியிழக்கலாம்..

_99663288_1ecd5c97-c9a7-440b-8338-7ed679e1801a

இரட்டை பதவி தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கிய 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. ‘டெல்லியை சேர்ந்த 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் தரும் கூடுதல் பதவி வகித்தனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகிப்பதோடு, ஆதாயம் தரும் வேறு ஒரு பதவியிலும் வகித்தனர். எனவே, ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்யுங்கள்’ என கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி எம்.எம்.ஏ-க்களில் 20 பேர் பாராளுமன்றச் செயலாளர்களாகப் பதவி வகித்தனர். இது சட்டபடி தவறு; அதனால், எம்.எல்.ஏ-க்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று பிரஷாந்த் பட்டேல் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பதவியிழக்கலாம் என தெரிகிறது.

Leave a Response