டிடிவி தினகரனின் சகோதரிக்கு பிடிவாரண்ட்.. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி..

madras4

டிடிவி தினகரனின் மைத்துனர் எஸ்.ஆர்.பாஸ்கரன், சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். 1997-ல் பாஸ்கரனும் அவரது மனைவி ஸ்ரீதளதேவியும், வருமானத்துக்கும் அதிகமாக ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 20 லட்சம் ரூபாய் அபராதமும் , ஸ்ரீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2008 ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தண்டனை பெற்றவர்கள் இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், சிபிஐ நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையாததால், தினகரன் மைத்துனர் பாஸ்கரனுக்கும், தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவிக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response