கெத்தாக மாஸ் காட்டும் சுயேச்சை தினா!

எனது வெற்றியை தமிழ்நாடே கொண்டாடுது.

நீலகிரி மாவட்டம் கோத்திகிரியில் இருந்து தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென வந்தார். அவருக்கு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பிரமாண்ட வரவேர்ப்பளித்தனர். தினகரன் எம்.எல்.ஏ.வை கோவிலில் பார்த்ததும் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் அவரை நோக்கி உற்சாகமாக கையசைத்தனர்.

dhinakaran

இதனைத்தொடர்ந்து தினகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டியதால் அங்கு வந்திருந்த பக்தர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இதனையடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.

இந்நிலையில் அங்கு பேசிய தினகரன்; ஏற்கனவே பண்ணாரி அம்மன் கோவிலுக்கு நான் வந்திருக்கிறேன். பண்ணாரி அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் என்றும் தெரியும். ஆகவே இங்கு வந்து தங்கத்தேர் இழுத்து அம்மனை வழிபட்டேன். இடைத்தேர்தலில் நான் பெற்ற வெற்றியை தமிழக மக்களே கொண்டாடுகிறார்கள். ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். நான் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்து என்னை வரவேற்று உற்சாகப்படுத்துகிறார்கள்.

மேலும் பேசிய அவர், மக்களின் ஆவலை பூர்த்தி செய்ய முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என கூறினார்.

Leave a Response