7 நாட்கள் வரையிலான அனுப்பப்பட்ட செய்திகளை அழிக்க முடியும்.. “வாட்ஸ்அப்”

iphone-whatsapp-chats-to-iphone

“வாட்ஸ்அப்”ல் 24 மணிநேரத்திற்குள் தற்காலிகமான செய்திகளை வெறும் மெசேஜ்களாக மட்டும் அனுப்பும் நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அப்ளிகேஷன், பல்வேறு முக்கிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த புதுப்பிப்புகளுக்கு இடையில், சமீபத்தில் வாட்ஸ்அப் ஒரு புதுப்பிப்பைப் பெற்றது. இதன்மூலம் தவறாக அனுப்பப்பட்ட செய்திகளை அனுப்புநர் மற்றும் பெறுநர் என்ற இரு பகுதிகளிலும் பயனர்களால் அழிக்க முடியும். துவக்கத்தில் மேலே குறிப்பிடப்பட்ட இந்த வசதி, அனுப்பப்பட்ட செய்திகளை வெறும் 7 நிமிடங்களுக்குள் மட்டுமே பயனரால் அழிக்க கூடிய அம்சமாக இருந்தது. அதே நேரத்தில் இதில் ஒரு திருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. இதன்மூலம் – – 7 நிமிடங்களுக்கு மட்டும் என்ற கால நிர்ணயித்தையும் கடந்து பயனரால் அழிக்க முடிகிறது. இந்தத் திருத்தம் மூலம் ஒரு பயனருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரையிலான அனுப்பப்பட்ட செய்திகளை அழிக்க முடிகிறது.

அவை பின்வருமாறு..

படி 1: முதல் வேலையாக, அமைப்புகள் பேனல் உடன் இணைய இணைப்பில் உள்ள உங்கள் வைஃபை அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் டேட்டா ஆகியவற்றை ஆஃப் செய்யவும்

படி 2: இப்போது அப்ஸில் தட்டி -> வாட்ஸ்அப் -> போர்ஸ் ஸ்டாப்பில் தட்டவும்

படி 3: உங்கள் கட்டுப்பாட்டிற்குள் அது வந்த பிறகு, முதலில் அமைப்புகளுக்கு மீண்டும் சென்று, தானாக தேதி & நேரத்தை புதுப்பித்து கொள்ளும் தேர்வை முடக்கவும்.

படி 4 : தற்போது நீங்கள் அனுப்பிய செய்தியைக் குறித்து, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தேதியையும் நேரத்தையும் மாற்றி வையுங்கள். அதில் உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், தேதியையும் நேரத்தையும் காட்டும் வரை, அரட்டையை (சாட்) உருட்டி பார்த்து கண்டறியலாம்.

படி 5: இதை செய்த பிறகு, எந்த மெசேஜ்ஜை அழிக்க வேண்டுமோ, அதை தொடர்ந்து சில வினாடிகளுக்கு அழுத்தி பிடிக்கவும். அப்போது ‘எனக்கு மட்டும் அழிக்கவும்’, ‘எல்லாருக்கும் அழிக்கவும்’ என்ற இரு விருப்பத்தேர்வுகள் காட்டப்படும். இதில் அனுப்பப்பட்டவரின் பகுதியிலும் மெசேஜ்ஜை அழிக்க வேண்டுமானால் இரண்டாவது தேர்வைத் தட்டவும். இல்லாவிட்டால் முதல் தேர்வைத் தட்டவும். இதை செய்த பிறகு, மீண்டும் வழக்கமான தேதி மற்றும் நேரத்தை மாற்றி விடுங்கள்.

Leave a Response