முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் பேத்தி டயானா ஜூப் வருகை.. தலைமை செயலகத்திற்கு அழைத்து கவுரப் படுத்த வேண்டும்.. பி.ஆர்.பாண்டியன் அறிக்கை..

Tamil_News_large_1937146

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் பேத்தி டயானா ஜூப் வருகையை தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் புறக்கனித்தது வன்மையாகக் கண்டிக்கதக்கது
பி.ஆர்.பாண்டியன்..

தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் முல்லை பெரியாறு அனையை தனது சொந்த சிலவில் கட்டி கொடுத்த இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பென்னிக்குயிக் அவர் களை அப்பகுதி மக்கள் கடவுளாகக வணங்கி வருவதோடு உழவர் திருநாளை அவரது நினைவாக ஆண்டுதோறும் பொங்கலிட்டு வணங்கியும் வருகிறார்கள்.

இந்நிலையில் இவ்வாண்டு கடந்த 13, 14, 15தேதிகளில் பொங்கல் திருநாள் அன்று பென்னி குயிக் குடும்பத்தினர் கொள்ளு பேத்தி டயானா ஜூப் தலைமையில் தேனி மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்ததோடு முல்லை பெரியாறு அனையையும் நேரில் பார்வையிட்டு அனை வலுவாக உள்ளதாக பெருமிதம் அடைந்துள்ளனர்.

அவர்களது வருகையை தமிழக அரசு அரசின் விருந்தினராக வரவேற்று கவுரவ படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்களை கண்டுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அவர்கள் வந்து சென்ற நாட்களில் அங்கு முகாமிட்டிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவர்களை சந்திக்காமல் புறக்கணித்ததும், உரிய வரவேற்பளிக்காமல் அலட்சியப்படுத்தியதும் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்நடவடிக்கையை அப்பகுதி விவசாயிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் |உரிய விளக்கமளிக்க வேண்டும். உடன் அவர்களது பயண விபரத்தை அறிந்து தலைமை செயலகத்திற்கு அழைத்து கவுரப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும் ஓஎன்ஜிசி வெளியேற வலியுறுத்தி வரும் 29 ந் தேதி நன்னிலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்று துவக்கி வைக்கிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்கம் சார்பில் நடைபெற உள்ளது என்றார்.
உடன் நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ், திருவாருர் மாவட்ட தலைவர் எம்.சுப்பைபன், ஒன்னிலம் ஒன்றிய செயலாளர் உதயக்குமார், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் இருந்தனர்.

Leave a Response