2ஜியிலிருந்து விடுதலையான ஆ.ராசா.. “3ஜி”யில் இணைந்தார்!

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது திமுகவின் ஆ. ராசா மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியதில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி புகார் கூறியது.

இந்த புகாரை சிபிஐ கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. திமுகவின் ஆ.ராசா , கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கின் தீர்ப்பை இந்த நாடே உற்று நோக்கியது.

எனினும் இந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இது திமுக மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது தீர்ப்பின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டதாக கூறினர்.

தன் மீது புகார் கூறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை திமுகவின் ஆ.ராசா சாடினார். இந்நிலையில் முதல்முறையாக ஆ.ராசா டுவிட்டரில் இணைந்தார்.

rasa

அவரது முதல் பதிவில் அவர் கூறுகையில் ‘டிவிட்டர்’ எனும் சமூக வலைத்தளம் 3ஜி இயங்கும் அலைக்கற்றையை தேசத்திற்கு அறிமுகப்படுத்தியவன் எனும் பெருமிதத்தோடு உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response