எஸ்.ஜே. சூர்யாவுக்கு புதிய ஜோடி

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாகிறார் மேயாத மான் படத்தின் ஹீரோயின் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரை தொடரில் நடித்த நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு மேயாத மான் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

bavani

தற்போது பிரியாவுக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்துவருகிறது. கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஒருநாள்கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார். மெர்சல் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response