அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்கள்.

vvv 2அலங்காநல்லூரில் 16ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இரண்டு ஆண்டுகளாக நடக்காமல் இருந்த நிலையில், கடந்த வருடம் மெரினாவில் எழுந்த போராட்டத்திற்கு பிறகு, ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், இந்தாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. வருகிற 16ம் தேதி நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். இதில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பங்கேற்கிறார்.

Leave a Response