மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு..! என மக்களிடம் கொட்டீத் தீர்த்த நீதிபதிகள்.

supreme_court_cji 2

உச்சநீதிமன்றம் சரியாக செயல்படவில்லை, இப்படியே போனால் ஜனநாயகம் கேள்விக் குறியாகிவிடும். தலைமை நீதிபதியை மாற்றுவது குறித்து நாடு தான் முடிவு செய்யும் என்றும் நாங்கள் எங்கள் பிரச்னை குறித்து முறையிட்டு பலன் இல்லாத நிலையில் தான் மக்களை நாடுகிறோம் என்று டெல்லியில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கொட்டீத் தீர்த்த வேதனைகள் நாடு முழுவதும் அனல் பறக்கும் விவாதங்களை வித்திட்டுள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக மூத்த நீதிபதிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நாட்டில் முதல்முறையாக இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன் லோகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் கூறுகையில், உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று குற்றம் சாட்டினர்.உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்கள் குறைகளை முறையிட்டோம்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response