ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில், இரண்டு பெட்டிகளை தந்தது அப்பல்லோ மருத்துவமனை..

sagi

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று விசாரணை ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களும் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், புகாருக்கு உள்ளானவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார்.இதற்கிடையே சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததால், அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி உள்ளார். அவர் சசிகலா தரப்பு விளக்கங்களை முன்வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *