பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் சீரிப்பாய்ந்தது..! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..

Missile-HP-690244980 2

தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் ‘கார்ட்டோசாட்-2’ உள்பட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இதேபோல் மற்ற 30 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
28 மணி நேர கவுண்ட்-டவுன் முடிந்து சரியாக இன்று காலை 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-40 விண்ணில் சிறிப்பாய்ந்தது. அதன் அனைத்து நிலைகளும் சிறப்பாக செயல்பட்டு செயற்கைக் கோள்கள் தனித்தனியாக பிரியத் தொடங்கியது.பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்தும்போது கோளாறு ஏற்பட்டது. அந்த கோளாறு முறையாக சரிசெய்யப்பட்டு வெற்றிகரமாக செலுத்த முடியும் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் 100-வது செயற்கைக்கோள் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து.விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Response