திரையரங்குகளுக்கு பொங்கல் போனஸ்..! கூடுதலாக ஒரு காட்சி..! தமிழக அரசு அறிவிப்பு.

amma-theatres-011
தமிழ்நாடு திரையரங்கம் உரிமையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 2018,12-01-2018-ல் இருந்து 18-01-2018 வரை அதிகபடியான ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகபடியான ஒரு காட்சி(5 வது காட்சி) காலை 9.௦௦ மணிக்கு நடத்திகொள்ளலாம்.

அதேபோல் நடமாடும் திரையரங்குகள் 13-01-2018,14-01-201-,15-01-2018,மற்றும் 16-01-2018 ஆகிய தேதிகளில் காலை காட்சி 9.௦௦ மணிக்கும்,12-01-2018, 17-01-2018 மற்றும் 18-01-2018 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சியாக மதியம் 2.30 மணிக்கு நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதிகபடியான காட்சிகள் நடத்த இருப்பதை குறித்த தகவலை முன்கூட்டியே மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கும் தெரிவித்து விட்டு அதிகபடியான காட்சிகளை நடத்தி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் என தலைவர் ராம.மு.அண்ணாமலை பொதுச்செயலாளர் ஆர்.பன்னிர்செல்வம் அறிக்கை வெளியிட்டனர்.

Leave a Response