இராமன் நல்லவனா..? இராவணன் கெட்டவனா..? ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.

Oru Nalla Naal Paathu Solren Movie Stills
Oru Nalla Naal Paathu Solren Movie Stills

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் மெளிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக வல்லுனர்களின் கணிப்பு படி இவை ஒரு வெற்றி படத்துக்கான அறிகுறிகள் என கருதப்படுகிறது.

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,அம்மே நாராயணா என்டர்டைமென்ட்’ மற்றும் ‘ 7சி ‘என்டர்டைமென்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது என்பதே இந்த பெரிய செய்தியாகும். குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் படங்களை மட்டுமே வாங்கும் சன் டிவி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியுள்ளது இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *