கருகும் காவிரி டெல்டா.. தண்ணீர் பெற்று தருமா..? தமிழக அரசு. பி.ஆர்.பாண்டியன் அறிக்கை.

former 22கருகும் காவிரி டெல்டா பாதுகாக்க 10000 கன அடி தண்ணீர் விடுவிக்க முதன்மை பொறியாளர் உறுதி.
பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் தகவல்..மேலும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது ‘…

கருகும் பயிரை காப்பாற்ற காவிரியில் கர்நாடகாவிடம் தண்ணீர் பெற்று தரவலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும்,பிரதமர் -கவர்னர் சந்திப்பில் காவிரி டெல்டா பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்திட வலியுறுத்தி திருச்சி பொதுப்பணித்துரை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று காலை 10.30 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.திருச்சி மண்டல தலைவர் புலியூர் நாகராஜன், மாநில துணை தலைவர் என்.அண்ணாதுரை,தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் த.புண்ணியமூர்த்தி, தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், திருச்சி மாவட்ட செயலாளர் ஹேமநாதன், தலைவர் வி.எம்.பாரூக், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தலைமை பொறியாளர் செந்தில்குமார், நடுக் காவிரி கண்கானிப்பு பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் குறித்து அறிக்கை தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளது எனவும்,மேட்டூரில் இருக்கும் தண்ணீரில் 10000 ம் கன அடி தண்ணீர் ஓரிரு நாட்களில் தொடர்ந்து விடுவிக்கப்படும் எனவும் உத்திரவாதம் அளித்துள்ளார். இதனை ஏற்று 4 மணி நேரத்திற்கும் மேலும் நீடித்த காத்திருப்புப் போராட்டம் 3.30 மணியளவில் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது என்றார்.

Leave a Response