போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் பரிதவிக்கும் தமிழகம்

poo 2
போக்கு வரத்துக் கழக ஊழியர்களுக்கும்மி,தழக அரசுக்கும் இடையே ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படாததால், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.தொ.மு.க., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 10 தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் தமிழ்நாடு முழுவதும் முதலில் சுமார் 80 சதவீத பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு முழுமையான வெற்றி கிடைக்க வில்லை.

தற்காலிக ஊழியர்களால் 5 சதவீதம் பஸ்களை கூட இயக்க முடியவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் டெப்போக்களில் சுமார் 60 சதவீத பஸ்கள் முடங்கிக் கிடக்கின்றன.பஸ் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் மின்சார ரெயிலிலும், மெட்ரோ ரெயிலிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலானவர்கள் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். குடும்பத்துடன் நடக்கும் ஆர்ப்பாட்டம் பிற்பகலில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தாலும் தமிழகத்தின் பல ஊர்களில் இன்று காலையிலேயே பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று காலையிலேயே குடும்பத்துடன் தனியார் பஸ்கள், வேன், ஜீப்களில் பணிமனை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தனர்.

போராட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோ‌ஷம் எழுப்பினர். இதில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் கலந்து கொண்டனர். ஊதிய உயர்வை உடனே வழங்கு, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்து என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், ‘‘அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை போக்குவரத்து தொழிலாளர்களும் பெறும் வகையில் 2.44 மடங்கு ஊதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்று போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போராட்டத்தை தொடர்ந்தால் அரசு சட்ட நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ஆலோசிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response