கமர்ஷியல் அம்சங்களோடு கருத்து சொல்கிறான் ‘வேலைக்காரன்’….

IMG-20171221-WA0099
சிவகார்த்திகேயன் வசிக்கும் அந்த குப்பம் முழுக்க முழுக்க தாதா பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அவர் கொலை செய்வார்; அவருக்காக குப்பத்திலுள்ள யாரேனும் ஒருவர் அந்த பழியை தன் மீது போட்டுக்கொண்டு தண்டனையை ஏற்றுக் கொள்வார்கள். இப்படி பல அட்டூழியங்கள். இந்த தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட குப்பத்துக்கென்றே எப்ஃஎம் தொடங்குகிறார்.

தன் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை தனக்கு எதிராக தூண்டுவதை உணர்கிற பிரகாஷ்ராஜ் சிவகார்த்தியின் எப்ஃஎம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார். பிரகாஷ்ராஜை எதிர்க்கும் முயற்சியை தற்காலிகமாக ஓரங்கட்டிவிட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் அந்த பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்கிறார் சிவா.

அந்த நிறுவனத்தின் உயரதிகாரியான பகத் பாசிலிடம் பொருட்களை வம்படியாக மக்களின் தலையில் கட்டுகிற கார்ப்பரேட் வியாபார யுக்தியை கற்றுக்கொள்கிறார்.

ஒரு கட்டத்தில், தான் கற்றுக் கொண்ட வியாபார தந்திரங்கள் எத்தனை மோசமானது என்பதை,

உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்கம் வரையறுத்துள்ள விதிமுறைகள் படி உணவுப் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பதை,

அப்படி விதிகளை மீறி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் உயிர்க்கொல்லி விஷம் என்பதை உணர்ந்து கொள்கிறார்.

இத்தனை உணர்ந்த ஹீரோவால் சும்மாயிருக்க முடியுமா?

உணவுப் பொருட்கள் மூலம் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற மக்கள் புரட்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

அந்த முயற்சிகள் என்னென்ன? முயற்சிகள் தந்த லாப நஷ்டங்கள் என்னென்ன? இதுதான் வேலைக்காரனின் கதை!

இயக்கம்: மோகன்ராஜா

இதுவரை தான் நடித்த படங்களிலிருந்து நடிப்பில் சற்றே மெருகேறியிருக்கிறார் சிவகார்த்தி. குப்பத்து இளைஞனாக, கார்ப்பரேட் நிறுவனத்தின் சேல்ஸ் மேனாக, சமூக அக்கறை கொண்ட போராளியாக என நடிப்பில் பெயர் வாங்குவதற்கான பாத்திரப் படைப்பு!

முடிந்தவரை நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்!

சோஷியல் மீடியா பிரபலமாக வருகிறார் நயன்தாரா. சிவகார்த்தியுடன் ஒரு கலர்ஃபுல் டூயட்டும் இருக்கிறது!

பகத் பாசில் தமிழ் சினிமாவுக்கு புது வரவு. மலையாளத்தில் நடிப்பு அசுரன் என்றெல்லாம் பெயரெடுத்திருக்கிற பகத்துக்கு இதில் பாரீன் மாப்பிள்ளை மாதிரியான கேரக்டர்! முகபாவங்களில் நடிப்பைக் காட்டி கேரக்டருக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்!

பிரகாஷ்ராஜ் நடிப்பு வழக்கம்போல்!

சோஷியல் மீடியா பிரபலமாக வருகிறார் நயன்தாரா. சிவகார்த்தியுடன் ஒரு கலர்ஃபுல் டூயட்டும் இருக்கிறது!

பகத் பாசில் தமிழ் சினிமாவுக்கு புது வரவு. மலையாளத்தில் நடிப்பு அசுரன் என்றெல்லாம் பெயரெடுத்திருக்கிற பகத்துக்கு இதில் பாரீன் மாப்பிள்ளை மாதிரியான கேரக்டர்! ஆனாலும் முகபாவங்களில் நடிப்பைக் காட்டி கேரக்டருக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்!

பிரகாஷ்ராஜ் நடிப்பு வழக்கம்போல்!

தம்பி ராமையா, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், அருள்தாஸ் என ஏராளமான நடிகர், நடிகைகள் இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு பெற்றோராக வரும் சார்லியும் ரோகிணியும் மனதுக்குள் இடம் பிடிக்கிறார்கள்!

சில காட்சிகளில் மட்டுமே வந்துபோனாலும் விஜய் வசந்த் கேரக்டர் தனியாக தெரிகிறது!

பாடல்களுக்கு அவசியமில்லாத கதையாக இருப்பினும் கமர்ஷியல் காம்போவுக்காக அனிருத் போட்டுக் கொடுத்த பாடல்கள் ஒன்றிரண்டு முறை கேட்கலாம் ரகம்! காட்சிகளின் தேவைக்கேற்ப பின்னணி இசைக்காகவும் மெனக்கெட்டிருக்கிறார்!

கலை இயக்குநரின் உழைப்பு படத்தின் மிகப் பெரிய பலம்!

நவீன உணவுகளுக்கு அடிமையாகி ஆரோக்கியத்தை தொலைத்திருக்கும் / தொலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு மிகமிக முக்கியத் தேவையான விழிப்புணர்வைத் தர இயக்குநர் மோகன் ராஜா எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிக்கு ராயல் சல்யூட்!

திரைக்கதையின் போக்கில் ‘இதெல்லாம் சாத்தியமா?’ என்பதுபோல் சிலபல காட்சிகள் இருந்தாலும் அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் வேலைக்காரனைத் தூக்கிக் கொண்டாட வேண்டும்!

Leave a Response