நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு நிறைவு

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிப்புகள் முடிவடைந்து, டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீசாக கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response