ஹிமாச்சலில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ் கட்சி

f723c6157ecf40751bc9e38e87df71aa

 ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில் அங்கு ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை இழக்கிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த மாநில முதல்வர் வீரபத்ர சிங் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடியவுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 74.61% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, பாஜக 43 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது. மீண்டும் அங்கு பாஜக ஆட்சி மலர்கிறது.

Leave a Response