குஜராத் சட்டசபை தேர்தல்- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ வெளியிடு!

counting-vote-10-600

குஜராத் சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி முன்னிலை நிலவரங்கள் மாறி வருகின்றன. மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தொடங்கியுள்ளது. இதில் முதல்வர் விஜய் ரூபானி, ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் முன்னிலை பெற்றதாக முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தெரிந்தது.

 ஆனால் அடுத்த வாக்குப்பெட்டியின் எண்ணிக்கையின் போது மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதே போன்று ஒவ்வொரு சுற்றுக்கும் முன்னிலை நிலவரம் மாறி வருகின்றன. ஊடகங்கள் அனைத்தும் குஜராத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

Assembly-elections-2017-counting-in-Gujarat-Himachal_SECVPF Tamil_News_large_1920538_318_219

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பாஜக 17 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்பது தான் தற்போதைய நிலவரமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதன் மூலம் தெரிய வருகிறது.

Leave a Response