முதல்வர் தொகுதியிலே மணல் கொள்ளை- கிராம மக்கள் குற்றச்சாட்டு!

manal1

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாழையன்குட்டை ஏரியில் விடிய விடிய மணல் மற்றும் செம்மண் அள்ளப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோடாங்கிபட்டி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய ஏரி வறண்டு விட்டது. இதனை பயன்படுத்தி கொண்ட ஆளுங்கட்சியினர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல முறை பல அதிகாரிகளுக்கு மணல் கொள்ளை பற்றி தகவல் கொடுத்தும், இதுவரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என சாடியுள்ளனர்.

368 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாழையன்குட்டை ஏரியில் அதிகாரிகள் துணையுடனே மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முதல்வர் தொகுதியிலேயே நடைபெறும் இந்த மணல் கொள்ளையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Response