சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

su32

எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, 12 சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.மேலும், இந்த சிறப்பு கோர்ட்களை மார்ச் 1 முதல் ப பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், இங்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும். சிறப்பு கோர்ட்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் எனவும், ஒராண்டிற்குள் வழக்குகளை விசாரித்து சிறப்பு கோர்ட்கள் தீர்ப்பு வழங்கலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, பீஹார், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுதும் 1,581 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Leave a Response