ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

ராதாரவியை நீக்கிய வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. வருகிற 19-ந் தேதி விஷால் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ராதாரவி உள்பட முன்னாள் நிர்வாகிகள் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து நடிகர் ராதாரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அடுத்த உத்தரவு வரும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் நடிகர் சங்கம் ராதா ரவி மீதான நடவடிக்கையை ரத்து செய்யவில்லை.

201702281304422874_Actor-Radharavi-joined-in-DMK_SECVPF

இதையடுத்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மீது ராதாரவி செனனை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில் பலமுறை கோர்ட்டு உத்தரவிட்டும் நடிகர் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாமல் கூடுதல் அவகாசம் கேட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் விஷால் வருகிற 19-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Response