யாழ்ப்பாணத்தில் மீன் மழை- மக்கள் மகிழ்ச்சி!

puyal1

ஓக்கி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களிலும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.

தற்போது தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திங்கட்கிழமை இரவு பெய்த மழையில் ஆயிரக்கணக்கான மீன்கள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுகுறித்து நல்லூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

download (7)

கடந்த மூன்று ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் மீன் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பர் முதல் வாரம் நல்லூர் வீரமாகாளி அம்மன் பகுதியில் மீன் மழை பெய்தது. திங்கட்கிழமை இரவு நல்லூரில் பெய்த மழையில் நன்னீர் வாழ் மீன்கள் குறிப்பாக அயரை மீன்கள் காணப்பட்டன என்றனர்.

‘பொதுவாக நீர்நிலைகளின் மீது சூறாவளிக் காற்று வீசும் போது அவற்றுடன் அங்கு வாழும் மீன்கள், தவளைகள், பாம்புகள், உள்ளிட்ட உயிரினங்கள் சுழல் காற்றில் வானத்தில் மேலெழும்பி அடித்துச் செல்லப்படுகின்றன. சூறாவளியின் சீற்றம் குறையும் பகுதிகளில் மீன்கள் தரையில் விழுந்து சிதறுகின்றன.

அதையே பொதுமக்கள் மீன் மழை என்று குறிப்பிடுகின்றனர். சூறாவளி அதிகம் வீசும் நாடுகளில் தவளை, தக்காளி மழையும்கூட பெய்துள்ளன’ என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response