ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடியவர் மனைவியுடன் கைது!

ong

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தென்னஞ்சாறு பகுதியில் ஓ.என்.ஜி.சி இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், 4 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.

இந்நிலையில் பேராசிரியர் ஜெயராமன், அவர் மனைவி சித்ரா, அவரின் ஆதரவாளர்கள் அருள்நேசன், பிரிதிவிராஜ் ஆகியோர் நேற்று நன்னிலத்துக்கு வருகை தந்தனர். அவர்களின் வருகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த போலீஸார், ஜெயராமன் உட்பட 4 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்வதாக அறிவித்தனர்.

ong1

அப்போது செய்தியாளர்கள் ஜெயராமனிடம் பேட்டி எடுக்க முற்பட்டபோதும் போலீஸார் அதற்கு அனுமதிக்காமல் 4 பேரையும் வலுக்கட்டாயமாகப் போலீஸார் வேனில் ஏற்றினர். பின்னர், போலீஸ் வேனில் அமர்ந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், இப்பகுதி மக்களை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரைப் பார்த்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஜனநாயக ரீதியில் கருத்து தெரிவிப்பதற்கும் அதிகாரிகளை சந்தித்து இப்பகுதி நிலையை எடுத்துச்சொல்வதற்கும் வழியில்லாமல் போய்விட்டது” என்றார்.

தொடர்ந்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம் மாப்பிளைக்குப்பத்தில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Response