ஓட்டுக்காக அம்பேத்கரை பயன்படுத்தும் காங்.,: மோடி தாக்கு

modi (1)

அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் இருட்டடிப்பு செய்துள்ளது என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். டில்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு மிக முக்கியமானது. அவரின் புகழையும், செயல்பாடையும் முறைக்க முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மக்களின் மனங்களில் இருந்து அவரின் ஆதிக்கத்தை அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.அம்பேத்கரின் வாழ்க்கையை நினைவு கூறும் இடங்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. இந்த நினைவு மையம் அமைக்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகியும் இதனை திறக்காமல் காங்., காலம் தாழ்த்தி வந்தது. ஓட்டு வங்கிக்காக மட்டுமே காங்., அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தி வந்துள்ளது. தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக சிவனின் பெயரை ராகுல் கையில் எடுத்துள்ளார் என்றார். தொடர்ந்து அம்பேத்கரின் இரண்டு சிலைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Leave a Response