பிரபல இயக்குநர் கார் விபத்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்!

83e360b447036f5a4f40904f7b2c9236

83e360b447036f5a4f40904f7b2c9236

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி ஓஎம்ஆர் சாலை வழியாக இன்று அதிகாலை வந்து கொண்டிருக்கும்போது அதிகாலை சுமார் 4 மணியளவில் சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் சிக்னலில் மணல் லாரி திரும்பும்போது நேராக வந்த இயக்குநர் கௌதம் மேனன் ஓட்டிவந்த (ஜாக்குவர் கார்) சொகுசுகார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

லேசான காயங்களுடன் இயக்குநர் கௌதம் மேனன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலணாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான சொகுசுக்காரையும், மணல் லாரியையும் மீட்டு கிண்டி போக்குவரத்து புலணாய்வு பிரிவு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *