நான் தவறு செய்து விட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்டார் சிம்பு

c2adc2a7-aa45-4113-90ca-71ad0968d1f0

நடிகர் சிம்பு நடித்த படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இதனை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமலும், கதையில் தலையிட்டும் சிம்பு ஏற்படுத்திய பிரச்சினையால் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் கூறியிருந்தார். இதனால் தயாரிப்பாளர் சங்கம், சிம்புவுக்கு ரெட்கார்ட் விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் நடித்துள்ள சக்கபோடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கி உள்ளார் சிம்பு. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய சிம்பு,
“நான் தவறு செய்துவிட்டேன் என்று கூறி மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்டார். அவர் மேலும் பேசியதாவது:எனக்கு மோசடி விளையாட்டு தெரியாது. ஆனால் எல்லோரும் என் மீது தவறு சொல்கிறார்கள். எதுவும் இல்லாமல் யாராவது சொல்வார்களா என் மீதும் தவறு இருக்கிறது ஒப்புக் கொள்கிறேன். ஏஏஏ படம் சரியா போகல தான்.
496e797a-f6ce-48f5-b2ab-718e034ccf89
தோல்வி படம் தான் ஒத்துக்கிறேன். அது ரசிகர்களுக்காக ஜாலியாக பண்ணின படம். அதுக்காக நான் வருத்தப்படல. அடுத்தடுத்த படங்களில் சரியாகிவிடும்.

ஒரு பாகமாக முடிய வேண்டிய படம் சில காரணங்களால் ரெண்டு பாகமாயிடுச்சு. அதனால் கொஞ்சம் செலவானதால புரட்யூசருக்கு கொஞ்சம் மனக்கசப்பு இருந்தது. பிரச்னைகளை படம் நடக்கும்போது சொல்லியிருக்கலாம், அல்லது ரிலீசுக்கு பிறகு சொல்லியிருக்கலாம், ஒரு மாதம் கழித்து சொல்லியிருக்கலாம், 6 மாதத்திற்கு பிறகு யாரோ சொன்னார்கள் என்று சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் இந்த மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் நல்லவன் என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.

நான் என்ன தவறு பண்ணினேன் என்று எனக்கு தெரியும். கொஞ்சம் தப்பாயிடுச்சு பரவாயில்லை. நான் இனிமே நடிக்க முடியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு அது பற்றி தெரியவில்லை.

மணிரத்னம் என்னை நடிக்க கூப்பிட்டிருக்கிறார். எந்த நம்பிக்கையில் கூப்பிடுகிறார் என்று தெரியவில்லை.சரி நடிக்க முடிலேன்னா பரவாயில்லை, வேறு ஏதாவது செய்துவிட்டுப் போகிறேன். நான் நடிப்பது நிச்சயம் எனக்காக இல்லை. என் ரசிகர்களை சந்தோஷப்படுத்தத்தான்.

200379b7-04c4-475b-9376-78f2f536cc85
நடிக்க முடிலேன்னா அவர்களுக்கு சேவை செய்து விட்டுப்போகிறேன். நடிப்பதை தடுக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதை எவனாலும் தடுக்க முடியாது. வேறு மொழிகளில் நடிப்பேன். ஏதோ ஒரு வழியில் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன்.நான் ஏன் இப்படி இருக்கேன் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறேன்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், நான் இந்த ஆர்டரை மாற்றி பின்பற்றுகிறேன். தெய்வம் தான் முதலில் அதன் பிறகு குரு, அதன் பிறகு தந்தை, இந்த இரண்டும் சேர்ந்து ஒருவராக எனக்கு கிடைத்தது பாக்கியம்”. இவ்வாறு சிம்பு பேசினார். சிம்பு பேசும்போது நடிகர் தனுஷ் அருகில் நின்று கொண்டிருந்தார்.

Leave a Response