சினிமாக்காரனுக்கு அரசியலுக்கு வர எல்லா தகுதியும் உண்டு : மோகன் ராஜா

201712032352011473_director-Mohan-Raja-says-Only-the-cinematographer-has-the_SECVPF

நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா என்ற மோகன் ராஜா. தனி ஒருவன் படத்திற்கு பிறகு, தற்போது சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் மோகன் ராஜா பேசியதாவது…
உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். எங்கள் மொத்த குழுவின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தது அனிருத்தின் இசை. அவரின் இசை தான் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் ஆயுதம். எங்கு போனாலும் தனி ஒருவன் மாதிரி படம் பண்ணுங்க என்று பலரும் சொல்கிறார்கள். அப்படி தயாரிப்பாளர் ராஜா கொடுத்த தைரியம் தான் இந்த வேலைக்காரன். சிவகார்த்திகேயனுடன் வேலை செய்வது மிகவும் சவுகரியம். மீண்டும் நாங்கள் இணைவோம். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அரசியலுக்கு வர சினிமாகாரனுக்கு தான் எல்லா தகுதியும் உண்டு. மக்கள் உணர்வுகளை அதிகம் புரிந்தவர்கள் கலைஞர்கள் தான்.இவ்வாறு மோகன் ராஜா கூறினார்.

Leave a Response